Jun 13, 2012

கிணற்றுத் தவளைகளான இலங்கை மவ்லவிகள்

Posted on 4:58 PM by ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை

அறையில் ஆடுவார்களாம். அம்பலத்துக்கு அழைத்தால் ஓடுவார்களாம்.
குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் உள்ள ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம். இதை இலங்கையில் உள்ள அதிகமான மவ்லவிகள் மறுக்கின்றனர். பாரதூரமான வழிகேட்டில் நாம் உள்ளதாக எழுத்து மூலமும் உரை மூலமும் மக்களிடம் பரப்பி வருகின்றனர். இது பற்றி நேரடி விவாதமோ கலந்துரையாடலோ நடத்தினால் இதில் ஒத்த கருத்து ஏற்படும் என்பதற்காக நாம் அழைப்பு விடுத்தால் அதை நிராகரிக்கின்றனர்.

பகிரங்க சவாலுக்கு பகிரங்க பதில்

தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் தக்லீத் வளர;க்கப் புதிதாக உருவான ஒரு குழு உண்மை உதயத்தின் மறுக்கப்படும் ஆதாரப்பூர்;வமான ஹதீஸ்கள் என்ற கட்டுரை தொடர்;பாக பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவர;களது அழைப்புக்கு எமது பதில் இது தான்.
وعباد الرحمان الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما(63)
 அர்ரஹ்மானின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால் ஸலாம் எனக் கூறுவார்கள். (25:63)
خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين(199)
 (நபியே!) நீர்; மன்னிப்பைக் கடைப்பிடித்து நன்மையை ஏவி அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக! (7:199)
இந்த ஆயத்துக்களின் அடிப்படையில் நாம் இவர்;களுக்கு ஸலாம் கூறி இவர்களைப் புறக்கணிக்கின்றோம்.
இதுவே இவர்களுக்கு எமது பதில். எனினும் இத்துண்டுப் பிரசுரத்தைப் பார்வையிட்ட ஏனைய சகோதரர்களுக்காக சில குறிப்புகள்:
உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும் என்று எழுதியுள்ளனர்;. உண்மை உதயம் இந்நாட்டில் (இலங்கை) நீண்ட காலமாக குர;ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வெளிவரும் ஓர் இதழாகும். பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக ஒரு கருத்து எழுதினால் இருளை உதயமாக்கும் என விமர்;ச்சிக்கின்றனரே! இதன் அர்;த்தம் என்ன? இது வரை நாம் எழுதிய குர்;ஆன்-ஹதீஸ் அனைத்தும் இருளாகி விட்டனவா?
இது வரை இருளை உதயமாக்கினால் ஏன் அப்போது இந்தப் பகிரங்க சவால் வெளிவரவில்லை? இவ்வாறு சிந்திக்கும் போது பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக யார் பேசினாலும் அவரின் அனைத்துக் கருத்துக்களும் பிழையானவை; பி.ஜெய்னுலாப்தீன் சொல்லும் அனைத்துக் கருத்துக்களும் உண்மையானவை என்ற வெறி உணர்வு இவர்களிடம் மேலோங்கி இருப்பதை அறியலாம்.
அல்லது நாம் இது வரை எழுதிய அனைத்தும் பிழையானவை என்பது அவர்களது கருத்தாயின் மார்க்கத்துக்கு முரணாக எழுதினாலும் பரவாயில்லை; பொறுத்துக் கொள்வோம். பி.ஜெய்னுலாப்தீனுக்கு முரணாக எழுதினால் விட மாட்டோம் என்ற பி.ஜெய்னுலாப்தீன் பித்து தான் அவர்களை அப்பொழுது இப்படி சவால் விட வைத்துள்ளதோ?
அடுத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்;களுக்கு சூனியம் செய்யப்படவில்லை; எவராலும் செய்யவும் முடியாது. இதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும் என்று எழுதியுள்ளனர்;.
நாமும் தவ்ஹீத் ஜமாஅத்துத் தான் அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் IAT > ஸபாப் ,IIRO போன்ற அனைவரும் தவ்ஹீத்வாதிகள் தாம். இன்றோ நேற்றோ சிலர் இணைந்து ஒட்டுமொத்த தவ்ஹீத்வாதிகளும் நாம் தாம் என்ற தோரணையில் எழுதுகின்றார்;கள் என்றால் இந்நாட்டின் தவ்ஹீத் பிரச்சார வரலாற்றையே திருட முனையும் இவர்;கள் எப்படி நியாயமானவர்;களாக இருப்பார்;கள்?
பி.ஜெய்னுலாப்தீனின் ஒரு கருத்துக்கு முரண்பட்டதால் பொய்களை உதயமாக்கும் என நடுநிலையில்லாது நாகரிகமில்லாது நியாய உணர்வில்லாது செயல்படும் இத்தகையவர்களைப் புறக்கணிப்பதே வழியாகும்.
தவ்ஹீதின் பெயரில் தக்லீதையும் தனிநபர்; வழிபாட்டையும் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் குழு குறித்து விழிப்புடன் செயல்படுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

அன்புடன்
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி


விவாதம் செய்ய அழைத்தால் அழைப்பவர்களை மடையர்கள் என்று சித்தரிக்கின்றனர். ஆனால் உமர் அலி, பரேலவிகளுடன் விவாதிக்க இவர்களுக்கு திராணி இல்லாத போது இவர்கள் நம்மை அழைத்து அவர்களுடன் விவாதிக்க வைத்தனர். இதில் இருந்து இவர்களின் சந்தர்ப்பவாதத்தை அறிந்து கொள்ளலாம்.
இவரது நிலையை
அம்பலப்படுத்தும் தொடர்கள் onlinepj இணைய தளத்தில் வெளியிடப்பட்டதையும் அதற்கு இன்றுவரை பதில் சொல்ல முடியவில்லை என்பதையும் நினைவூட்டுகிறோம்.
இந்த நிலையில் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் இலங்கை வந்த போது நேரடி விவாதம் அல்லது நட்பு முறையிலான கலந்துரையாடல் நடத்த தொலைபேசி மூலம் அழைப்பு விடப்பட்டது. இஸ்மாயீல் ஸலஃபி உள்ளிட்ட அனைவரும் இந்த அழைப்பை நிராகரித்து விட்டனர். பதிவு செய்யப்பட்ட அந்த தொலை பேசி உரையாடலை நேயர்களுக்கு பயன்படும் என்பதற்காக வெளியிடுகிறோம்.

No Response to "கிணற்றுத் தவளைகளான இலங்கை மவ்லவிகள்"

Leave A Reply

Powered by Blogger.